February 16, 2025
தேசியம்
செய்திகள்

கனடிய தேசிய விமி நினைவகம் நாசமாக்கப்பட்டது!

Franceசில் அமைந்துள்ள கனடிய தேசிய விமி நினைவகம் – Canadian National Vimy Memorial – நாசமாக்கப்பட்டது.

செவ்வாய்கிழமை (16) கனடிய தேசிய விமி நினைவகம் நாசமாக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன

கனேடிய தேசிய விமி நினைவகத்தை சேதப்படுத்தியதை கனடாவின் படைவீரர் விவகார அமைச்சர் கண்டித்துள்ளார்.

இந்த நாசவேளைக்கு பொறுப்பான நபரைக் கண்டறிய France அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அமைச்சர் Ginette Petitpas Taylor ஒரு அறிக்கையில் கூறினார்.

கனடிய தேசிய விமி நினைவகம் நாசப்படுத்தப்பட்டது குறித்து “திகைப்படைவதாக” அமைச்சர் கூறினார்.

100 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் உலகப் போரின் போது France, Belgium குடிமக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக உயிர் நீர்த்த 60,000 கனடியர்களின் தியாகத்தை நினைவுகூரும் புனிதமான இடமாக கனடிய தேசிய விமி நினைவகம் அமைந்துள்ளது.

Related posts

April மாதத்தின் ஆரம்பத்தில் நான்காவது தடுப்பூசி குறித்த வழிகாட்டுதல் வெளியாகும்

சிறப்பு அறிக்கையாளர் பதவி விலக வேண்டும்!

Lankathas Pathmanathan

Ontarioவில் 367 monkeypox தொற்று பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment