தேசியம்
செய்திகள்

Casey Oakes மரணம் எட்டு இடம்பெயர்ந்தோர் மரண விசாரணையுடன் தொடர்புடையது!

அண்மையில் St.Lawrence ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் இடம்பெயர்ந்தோர் விசாரணையுடன் தொடர்புடையது என Akwesasne காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பலியானவர் 30 வயதான Casey Oakes என காவல்துறையினர் அடையாளம் வெளியிட்டனர்.

இவர் St.Lawrence ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 8 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் தொடர்புபட்டவர் என கூறப்படுகிறது.

எட்டு புலம்பெயர்ந்தோரின் மரணம் தொடர்பான விசாரணையில் தொடர்புடைய ஒருவரின் சடலம் இந்த மாதம் கண்டெடுக்கப்பட்டதாக Akwesasne காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

Quebec, Ontario, New York பகுதிகளை உள்ளடக்கிய Akwesasne Mohawk பிரதேசம் வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக கடக்க முயன்ற போது இறந்த எட்டு இடம்பெயர்ந்தவர்களின் உடல்களுக்கு அருகில் அவரது படகு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் Akwesasne Mohawk சமூகத்தின் St. Lawrence ஆற்றில் எட்டு இந்திய, ருமேனிய குடியேற்றவாசிகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்

இறந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குகின்றனர்.

இவர்கள் படகு மூலம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக கடக்க முயற்சி செய்தனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு boosters தடுப்பூசியை வழங்க NACI கடும் பரிந்துரை

Lankathas Pathmanathan

Ontarioவில் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும்!

Lankathas Pathmanathan

Alberta தீவிர சிகிச்சை பிரிவில் அதிக எண்ணிக்கையில் தொற்றாளர்கள்!

Gaya Raja

Leave a Comment