தேசியம்
செய்திகள்

வணிக வாகன திருட்டு விசாரணையில் 15 பேர் கைது

Toronto பெரும்பாகம் அளவிலான வணிக வாகன திருட்டு விசாரணையில் 73 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த விசாரணையில் Peel பிராந்திய காவல்துறையினர் 15 பேரை கைது செய்துள்ளனர்.

இவர்கள் பொருட்கள் ஏற்றப்பட்ட வணிக வாகனங்களை திருடி, அந்த பொருட்களை விற்பனை செய்ததாக இந்த விசாரணையில் தெரியவருகிறது.

Project Big Rig என பெயரிடப்பட்ட இந்த விசாரணை கடந்த March மாதத்தில் ஆரம்பமானதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்த விசாரணையில் Peel, York, Halton பிராந்திய காவல்துறையினரும், Toronto நகர காவல்துறையினர், Ontario மாகாண காவல் துறையினரும் பங்கேற்றனர்

இந்த விசாரணையில் 28 கொள்கலன்களில் 6.99 மில்லியன் டொலர் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.

2.25 மில்லியன் டொலர் பெறுமதியான மேலும் 28 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன

இதன் மூலம் மீட்கப்பட்ட மொத்த மதிப்பு 9.24 மில்லியன் டொலர் என புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related posts

தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தின் இறுதி வடிவமைப்பு திறந்து வைப்பு

Lankathas Pathmanathan

Liberal கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது!

Gaya Raja

Ontario Liberal கட்சித் தலைமைத்துவப் போட்டி: Eric Lombardi விலகல்!

Lankathas Pathmanathan

Leave a Comment