September 19, 2024
தேசியம்
கனேடிய தேர்தல் 2021 செய்திகள்

Liberal கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது!

Liberal கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
2021ஆம் ஆண்டுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் தொற்றுக்கு பின்னரான மறுசீரமைப்பிற்கு 78 பில்லியன் டொலருக்கான புதிய நிதி உதவியை Liberal கட்சி உறுதியளித்தது.
82 பக்கம் கொண்ட இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடுத்த ஐந்து ஆண்டுக்கான உறுதிமொழி வெளியானது.
இந்த காலகட்டத்தில் எதிர்பார்க்கப்படும் நேரடி புதிய வருவாயை விட Liberal கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் மூன்று மடங்குக்கும் அதிகமான செலவுகளைக் கொண்டுள்ளது.
ஆனால் வரவு செலவுத் திட்டம் இந்த ஐந்து வருட காலத்தில் சமப்படுத்த எந்த திட்டமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதான அரசியல் கட்சிகளில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட கட்சி Liberal கட்சியாகும்.

Related posts

சூடானில் இருந்து கனேடியர்களை வெளியேற்றும் இரண்டு கனடிய விமானங்கள்

Lankathas Pathmanathan

உக்ரேனிய இராணுவத்துடன் இணைந்து போரிட்ட இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

காவல்துறை அதிகாரி பலியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த புதிய விவரங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment