February 16, 2025
தேசியம்
செய்திகள்

Pharmacare சட்டமூலம் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட வேண்டும்: Jagmeet Singh

Pharmacare சட்டமூலம் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என NDP தலைவர் Jagmeet Singh வலியுறுத்தினார்.

Liberal அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றவில்லை என்றால் NDP-Liberal ஒப்பந்தத்தின் நிலை கேள்விக்குறியாகும் என அவர் எச்சரித்தார்.

வியாழக்கிழமை (19) நடைபெற்ற NDP நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரண்டாவது நாள் சந்திப்பில் Singh இந்த நிபந்தனையை முன்வைத்தார்.

ஒப்புக் கொண்டதன் பிரகாரம் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றவில்லை என்றால் அரசாங்கத்திற்கான எமது ஆதரவை மீளப்பெறும் அதிகாரம் எமக்கு உள்ளது எனவும் Singh கூறினார்.

இந்த நிலையில் Liberal அரசாங்கம் pharmacare சட்டமூலத்தில் உறுதியாக உள்ளது என சுகாதார அமைச்சரின் பேச்சாளர் கூறினார்.

இந்த தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்குவதில் மாகாணங்களுடனும் ம் பிரதேசங்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

NDP-Liberal கட்சிகளுக்குள் கடந்த March மாதம் ஒரு நம்பிக்கை ஒப்பந்தம் கைசாத்தானது.

இதில் 2025ஆம் ஆண்டு வரை சிறுபான்மை அரசாங்கத்தை முக்கிய வாக்களிப்புகளில் ஆதரிக்க NDP ஒப்புக் கொண்டது.

இதற்கு மாற்றீடாக Pharmacare சட்டமூலத்தை இயற்றுவது உட்பட சில முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்ல Liberal கட்சி இணங்கியது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் அதிகரிக்குமா தொற்றுக்கள்!

Gaya Raja

Donald Trump மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானால் கனடாவுக்கு பாதிப்பு?

Lankathas Pathmanathan

Ontario Liberal கட்சி தலைவர் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment