November 13, 2025
தேசியம்
செய்திகள்

AstraZeneca தடுப்பூசி இரத்த உறைவினால் Ontarioவில் முதலாவது மரணம்!

AstraZeneca தடுப்பூசியால் முதலாவது மரணம் Ontarioவில் பதிவாகியுள்ளது.

AstraZenecaவினால் ஏற்பட்ட இந்த முதலாவது இரத்த உறைவு மரணத்தை Ontario உறுதிப்படுத்துகிறது. மரணமடைந்தவர் 40 வயதான ஆண் என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவர் கடந்த April மாதம் இறுதியில் தனது AstraZeneca தடுப்பூசியை பெற்றுக் கொண்டார் என தெரியவருகின்றது. அவரது மரணம் குறித்த விசாரணை தொடர்வதாகவும் மரணத்திற்கான இறுதி காரணம் அதிகாரப்பூர்வமாக தீர்மானிக்கப்படவில்லை எனவும் முதன்மை சுகாதார மருத்துவ அலுவலர் வைத்தியர் Barbara Yaffe கூறினார்.

இந்த மாத ஆரம்பத்தில் AstraZenecaவை முதலாவது தடுப்பூசியாக வழங்கப்போவதில்லை என Ontario அறிவித்தது. ஆனாலும் கடந்த வெள்ளிக்கிழமை, AstraZenecaவின் பயன்பாட்டை மீண்டும் ஆரம்பிப்பதாக கூறியது.

ஏற்கனவே AstraZenecaவை முதலாவது தடுப்பூசியாக பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக மாத்திரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான AstraZeneca தடுப்பூசிகள் காலாவதியாகும் முன்னர் May மாதம் 31ஆம் திகதிக்குள் அவற்றை பயன்படுத்த Ontario முடிவு செய்துள்ளது.

Related posts

தமிழ் இளைஞர் பெருமளவிலான ஆயுதங்களுடனும் போதைப் பொருள்களுடனும் கைது

Lankathas Pathmanathan

காவல்துறை அதிகாரியை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை இடை நிறுத்தும் கனடிய மாகாணங்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment