தேசியம்
செய்திகள்

Pickering நகரில் தமிழ் இளைஞன் சுட்டுக் கொலை!

Durham பிராந்தில் இந்த ஆண்டு நிகழ்ந்த ஆறாவது கொலையில் மரணமடைந்தவர் தமிழர் என புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Pickering நகரை சேர்ந்த 20 வயதான அரவின் சபேசன் என்பவர் மரணமடைந்ததாக திங்கட்கிழமை (23) காலை Durham பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (19) மதியம், Pickering நகரில் உள்ள Taunton Road and Concession Road 4 அருகில் வாகன விபத்து விசாரிக்க காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்

அங்கு ஒரு ஆண் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டபோது மரணத்திற்கான காரணம் துப்பாக்கிச் சூட்டுக் காயம் எனத் தெரியவந்தது.

இந்த நிலையில் மரணமடைந்தவர் அரவின் சபேசன் என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் புலனாய்வாளர்கள் பொதுமக்களிடம் உதவி கோருகின்றனர்.

July மாதம் 13ஆம் திகதி 2001ஆம் ஆண்டு பிறந்த இவரது இறுதி கிரிகைகள்
திங்கட்கிழமை (23) Ajax நகரில் நடைபெறும்.

Related posts

$70 மில்லியன் Lotto Max அதிஷ்டலாப சீட்டு Albertaவில் கொள்வனவு

Lankathas Pathmanathan

August இறுதிக்கு பின்னரும் கனேடிய இராணுவத்தினர் காபூலில் தங்கியிருப்பார்: பிரதமர் Trudeau!

Gaya Raja

இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை – கனடிய தமிழர் பேரவை கவலை

Lankathas Pathmanathan

Leave a Comment