தேசியம்
செய்திகள்

இந்த வாரம் கனடா 2 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை பெறும்: அமைச்சர் ஆனந்த்

இந்த வாரம் அமெரிக்காவில் இருந்து AstraZeneca தடுப்பூசிகள் கனடாவை வந்தடைய கூடும் என அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கனடாவுக்கு 1.5 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்பவுள்ள அமெரிக்கா முடிவு செய்தது.  இந்த வார ஆரம்பத்தில் அமெரிக்காவிலிருந்து கனடா இந்த AstraZeneca-Oxford  தடுப்பூசிகளை பெறலாம் என கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் கூறுகிறார். அதேவேளை Johnson & Johnson நிறுவனத்திடம் இருந்து மேலதிக தடுப்பூசிகளை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில் கனடாவின் AstraZeneca தடுப்பூசிகளை அமெரிக்கா தடுக்கவில்லை என கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் Kirsten Hillman கூறினார்.

இந்த வாரம் கனடா 2 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை பெறவுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இவற்றில் 1.2 மில்லியன் Pfizer தடுப்பூசிகள் எனவும், 846,000 Moderna தடுப்பூசிகள் எனவும் தெரியவருகின்றது.

Related posts

ரஷ்யாவைச் சேர்ந்த Wagner குழுவை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட இணக்கம்

Lankathas Pathmanathan

கனடா : COVID தொற்றின் பரவல் மோசமடைகிறது!

Gaya Raja

கனடிய அரசுக்கும் – பொதுச் சேவை சங்கத்துக்கும் இடையில் தொடரும் பேச்சுவார்த்தை

Lankathas Pathmanathan

Leave a Comment