தேசியம்
செய்திகள்

Ontarioவில் October மாதத்திற்குள் 9,000 நாளாந்த தொற்றுக்கள் பதிவாகலாம்!

Ontarioவின் நான்காவது அலைக்கு மத்தியில் October மாதத்திற்குள் நாளாந்தம் 9,000 COVID தொற்றுக்கள் பதிவாகலாம் என எச்சரிக்கப்படுகிறது.

புதன்கிழமை வெளியான புதிய modelling தரவுகளின் அடிப்படையில் இந்தத் தரவு வெளியானது.

Ontarioவில் தொற்றின் பரவலும், மக்களிடேயை தொடர்புகளும் குறைக்கப்படாவிட்டால், இலையுதிர் காலத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயரக்கூடும் என இந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலையுதிர் காலத்தில் முழுமையான பூட்டுதலைத் தவிர்க்க, தடுப்பூசி பெற்றவர்கள் விகிதம் 85 சதத்திற்கு அதிகமாக உயர வேண்டும் என இந்த modelling தரவுகளின் தெரிவிக்கப்படுகின்றது

Ontarioவில் கடந்த மாதம் புதிய தொற்றின் ஏழு நாளுக்கான சராசரி 270 சதவிகிதம் அதிகரித்து குறிப்பிடத்தக்கது.

Related posts

Conservative தலைமைக்கான வாக்களிப்பு முடிவடைந்தது

Lankathas Pathmanathan

Titan நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தவர்கள் குறித்து கனேடிய அதிகாரிகள் விசாரணை!

Lankathas Pathmanathan

தனது booster தடுப்பூசியை அங்கீகரிக்குமாறு Health கனடாவிடம் கோரும் Moderna!

Gaya Raja

Leave a Comment