தேசியம்
செய்திகள்

சிறப்பு அறிக்கையாளர் David Johnston பதவி விலகுகிறார்!

வெளிநாட்டு தலையீடு தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் David Johnston பதவி விலகுகின்றார்.

பிரதமர் Justin Trudeauவுக்கு எழுதிய கடிதத்தில் தனது பதவி விலகல் முடிவை David Johnston வெள்ளிக்கிழமை (09) மாலை வெளியிட்டார்.

இந்த மாத இறுதிக்குள் அல்லது ஒரு சுருக்கமான இறுதி அறிக்கையை வெளியிட்டவுடன் பதவி விலகுவதாக அவர் இந்த கடிதத்தில் குறிப்பிட்டார்.

மிகவும் பாகுபாடான சூழ்நிலையை தனது பதவி விலகலுக்கு காரணமாக அவர் மேற்கோள் காட்டினார்.

David Johnston அவரது பதவியில் இருந்து விலகுவதற்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக கடந்த வாரம் வாக்களித்தனர்.

ஆனாலும் பதவியில் தொடரவுள்ளதாக David Johnston தெரிவித்திருந்தார்.

இந்த முடிவை பிரதமர் Justin Trudeauவும் ஆதரித்திருந்தார்.

கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பொது விசாரணைக்கு அழைப்பு விடுப்பதற்கு எதிராக David Johnston பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Air இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவர் British Colombiaவில் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

கனடியர்களுக்கு செலுத்தப்படும் COVID தடுப்பூசிகள்

Lankathas Pathmanathan

கனடிய பிரதமர் – Alberta முதல்வர் சந்திப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment