September 16, 2026
தேசியம்
செய்திகள்

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறும் சந்தர்ப்பத்தை மீண்டும் பெறும் Toronto Maple Leafs

Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறும் சந்தர்ப்பத்தை மீண்டும் Toronto Maple Leafs அணி பெற்றுள்ளது.

சனிக்கிழமை (29) நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால், Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றுக்கு Maple Leafs அணி தகுதிபெறும்.

முதலாவது சுற்றில் Atlantic பிரிவில் Toronto Maple Leafs அணி Tampa Bay Lightning அணியை எதிர்கொள்கிறது.

மொத்தம் ஏழு ஆட்டங்கள் கொண்ட முதல் சுற்றில் மூன்று ஆட்டங்களில் Maple Leafs அணியும் இரண்டு ஆட்டங்களில் Lightning அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த தொடரின் ஆறாவது ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

Toronto Maple Leafs, Edmonton Oilers, Winnipeg Jets ஆகிய மூன்று கனடிய அணிகள் இம்முறை Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்றன

இவற்றில் Winnipeg Jets அணி ஏற்கனவே Stanley Cup தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறும் நிலையில் Edmonton Oilers அணியும் உள்ளது.

Related posts

வார இறுதியில் தெற்கு Ontarioவின் சில பகுதிகளில் 60 CM வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் குறையும் Liberal கட்சியின் ஆதரவு

Lankathas Pathmanathan

COVID-19 தொற்றினால் நெடுந்தீவைச் சேர்ந்த பெண் கனடாவில் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment