தேசியம்
செய்திகள்

வருடாந்த பணவீக்கம் January மாதம் குறைந்தது

கனடாவின் வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் குறைந்துள்ளது.

கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் January மாதத்தில் 5.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (21) வெளியிடப்பட்ட அதன் நுகர்வோர் விலைக் குறியீட்டு அறிக்கையில் கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது.

ஆனாலும் கடந்த மாதம் மளிகைப் பொருட்களின் விலைகள் அதிகமாக உயர்ந்திருந்தது.

December மாதத்தில் பணவீக்கம் 6.3 சதவீதமாக இருந்தது.

இறுதியாக கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் கடந்த ஆண்டு February மாதம் ஆறு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.

2022ஆம் ஆண்டு February மாதம் கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் 5.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடிய நாடாளுமன்றத்தில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம்

Lankathas Pathmanathan

கனடியர்களுக்கான பயண எச்சரிக்கை பட்டியலில் அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan

தமிழீழ விடுதலைப் புலிகள், உலகத் தமிழர் இயக்கம் மீதான தடை கனடாவில் நீடிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment