February 16, 2025
தேசியம்
செய்திகள்

சுற்றுச் சூழல் கனடாவினால் நாடளாவிய ரீதியில் வானிலை எச்சரிக்கை

கனடாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடாவினால் வானிலை எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

Ontarioவை ஒரு குளிர்கால பனி, பனி புயல் கடுமையாக தாக்கும் என அதில் எதிர்வு கூறப்படுகிறது.

கனடாவின் வடக்குப் பகுதிகள், பெரும்பாலான Prairies மாகாணங்கள் கடுமையான குளிர், குளிர்கால புயல் எச்சரிக்கைகளின் கீழ் உள்ளன.

வடக்கு Ontarioவின் சில பகுதிகள் கடும் குளிர் எச்சரிக்கையின் கீழ் உள்ளன.

Windsor முதல் Ottawaவரை, சுற்றுச்சூழல் கனடா பனி, பனி பொழிவு , உறைபனி மழைக்கான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக மின்சாரத்தின் செயலிழப்பு குறித்த எச்சரிக்கையும் விடுவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கனடியர்கள் ஒரு தேர்தலை விரும்புகின்றனர்? – பிரதமரின் கருத்து!

Lankathas Pathmanathan

Manitobaவின் அடுத்த முதல்வராக Kelvin Goertzen பதவியேற்கிறார் !

Gaya Raja

கல்வி அமைச்சர் Todd Smith பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment