தேசியம்
செய்திகள்

சுகாதார பராமரிப்பு நிதி ஒப்பந்தங்களை Conservative அரசாங்கம் ஆதரிக்கும்: Poilievre

மத்திய – மாகாண சுகாதார பராமரிப்பு நிதி ஒப்பந்தங்களை Conservative அரசாங்கம் தொடர்ந்து ஆதரிக்கும் என கட்சி தலைவர் Pierre Poilievre புதன்கிழமை (08) தெரிவித்தார்.

தான் பிரதமரானால், மாகாணங்களுடனும் பிரதேசங்களுடனும் பிரதமர் Trudeau செய்து கொள்ள விரும்பும் 10 ஆண்டுகால ஒப்பந்தங்களை தொடர்ந்தும் நிலை நிறுத்தவுள்ளதாக Conservative கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மாகாண, பிராந்திய முதல்வர்களிடம் $196 பில்லியன் சுகாதார பராமரிப்பு நிதியுதவி திட்டத்தை பிரதமர் Justin Trudeau முன்வைத்திருந்தார்.

ஆனாலும் மாகாணங்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்டும் வகையில் Trudeau புதிய நிதியுதவியை அறிவிக்காதது வருந்தத்தக்கது என முன்னர் Poilievre கூறியிருந்தார்.

ஆனாலும் இறுதி செய்யப்பட்ட எந்த ஒப்பந்தத்தையும் தொடர்ந்து ஆதரிக்கவுள்ளதாக Poilievre தெரிவித்தார்.

தான் பிரதமரானால், மேலதிக பணத்தை சுகாதார பராமரிப்பு திட்டத்திற்கு வழங்குவாரா என்பது குறித்த தெளிவான அறிவித்தல் எதனையும் Poilievre வெளியிடவில்லை.

Related posts

Ansar Allah இயக்கத்தை பயங்கரவாத குழுவாக தடை செய்ய வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

கனடியர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்படலாம்?

Lankathas Pathmanathan

கனடாவில் திருடப்பட்ட வாகனங்கள் இத்தாலியில் பறிமுதல்

Lankathas Pathmanathan

Leave a Comment