தேசியம்
செய்திகள்

Ontarioவில் அமுலில் உள்ள, வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு நீட்டிக்கப்படலாம்!

Ontarioவில் அமுலில் உள்ள வீட்டில் முடக்குவதற்கான உத்தரவை நீட்டிப்பது குறித்து விவாதிக்க Doug Ford அரசாங்கம் இந்த வாரம் கூடவுள்ளது.

தற்போது அமுலில் உள்ள வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு இந்த மாதம் 20ஆம் திகதி முடிவடைகின்றது. ஆனால் இந்த உத்தரவு காலாவதியாகும்போது என்ன கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முதல்வர் Doug Ford அவரது அமைச்சரவையுடன்  எதிர்வரும் நாட்களில் சந்தித்து மாகாணத்தின் அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விவாதிக்கவுள்ளதாக தெரியவருகின்றது. June மாதம்  2ஆம் திகதிவரை வரை தற்போது அமுலில் உள்ள உத்தரவு நீட்டிக்கப்படும் என எதிர்பார்ப்பாகவுள்ளது.

தொற்றின் எண்ணிக்கை குறைவடைந்து தடுப்பூசி வழங்கப்படுவதன் விகிதம் அதிகரித்துவரும் போதிலும், தற்போது அமுலில் உள்ள கட்டுப்பாடுகளை கைவிட வேண்டிய நேரம் இதுவல்ல என அதிகாரிகள் கூறுகின்றனர். 

Related posts

இலங்கை: சீரழிந்து வரும் பொருளாதாரம் – உள்நாட்டு அமைதியின்மை குறித்து கனடா கவலை

கனடிய முதற்குடியினருக்கும் போப் பாண்டவருக்கும் இடையில் இந்த வாரம் சந்திப்பு

Lankathas Pathmanathan

வரலாறு காணாத உச்சத்தை எட்டும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!