தேசியம்
செய்திகள்

Ontario மாகாண அமைச்சர் தீடீர் பதவி விலகல்

Ontario மாகாண Progressive Conservative அமைச்சர் Merrilee Fullerton, பதவி விலகியுள்ளார்.

Doug Ford அரசாங்கத்தில் நீண்டகாலமாக அமைச்சராக இருந்த அவர், எதிர்பாராத விதமாக வெள்ளிக்கிழமை (24) தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Kanata-Carleton தொகுதியின் மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும், அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக வெள்ளியன்று அவர் அறிவித்தார்.

அவர் தனது பதவி விலகலுக்கான காரணங்கள் எதையும் வெளியிடவில்லை.

இவரது பதவி விலகல் காரணமாக குழந்தைகள், சமூகம், சமூக சேவைகள் பதவிக்கு புதிய அமைச்சரை முதல்வர் Doug Ford நியமித்தார்.

குழந்தைகள், சமூகம், சமூக சேவைகள் அமைச்சராக Michael Parsa பதவி ஏற்பார் என முதல்வர் Doug Ford வெள்ளி மாலை அறிவித்தார்.

Related posts

பிரதமருடன் அவசர சந்திப்புக்கு மாகாண, பிராந்திய முதல்வர்கள் அழைப்பு

Lankathas Pathmanathan

இரண்டு மாத குழந்தை தாக்கப்பட்ட சம்பவத்தில் குடும்ப உறுப்பினர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை தோல்வி

Lankathas Pathmanathan

Leave a Comment