COVID தொற்று நோய்க்கு மத்தியில் வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் கனடியர்களை மீண்டும் கனடாவிற்கு அழைக்கும் நடவடிக்கையை கனடா மேற்கொள்ளாது என தெரிவிக்கப்பிட்டுள்ளது
கனடிய வெளியுறவு அமைச்சர் Francois-Philippe Champagne இன்றைய (23) நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் முன்னதாக இந்தக் கருத்தை வெளியிட்டார்.தொற்று நோய் உலகெங்கிலும் தொடர்ந்து பரவும் நிலையில் மத்திய அரசு இனி பயணிக்கும் கனடியர்களை திருப்பி அழைக்காது என வெளியுறவு அமைச்சர் கூறினார்.
தொற்றுக் காலத்தில் அரசாங்கத்தின் “பயண ஆலோசனை மிகவும் தெளிவாக உள்ளது” எனவும் அமைச்சர் Champagne கூறினார். இந்த ஆண்டு பயணம் செய்வது “பொருத்தமானது” எனத் தான் நினைக்கவில்லை எனவும் Champagne கூறினார். உலகெங்கிலும் உள்ள COVID நிலைமையைப் பார்க்கும்போது வீட்டில் இருப்பதே செய்ய வேண்டிய சரியான நடவடிக்கை எனவும் அமைச்சர் Champagne தெரிவித்தார்.