தேசியம்
செய்திகள்

மீண்டும் வட்டி விகித உயர்வை அறிவித்த கனடிய மத்திய வங்கி!

கனடிய மத்திய வங்கி மற்றொரு வட்டி விகித உயர்வை புதன்கிழமை (26) அறிவித்தது.

வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக கனடிய மத்திய வங்கி புதன்கிழமை அறிவித்தது .

இதன் மூலம் தனது வட்டி விகிதத்தை 3.25 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக மத்திய வங்கி உயர்த்தியுள்ளது.

இந்த வட்டி விகித உயர்வு அறிவிப்பின் மூலம், மத்திய வங்கி தொடர்ந்து ஆறாவது முறையாக வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

இது கனடிய மத்திய வங்கியின் வரலாற்றில் மிக விரைவான பணவியல் கொள்கை அதிகரிப்பாகும்.

அதேவேளை அடுத்த ஆண்டின் முதல் பாதியில் சாத்தியமான மந்த நிலை குறித்த முன்னறிவித்தலையும் மத்திய வங்கி வெளியிட்டது.

மத்திய வங்கியின் அடுத்த வட்டி விகித உயர்வு December மாதம் 7ஆம் திகதி எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் September மாதம்  6.9 சதவீதமாக குறைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Northwest பிரதேச காட்டுத்தீ கிழக்கு கனடாவிற்கு பரவும் வாய்ப்பு

Lankathas Pathmanathan

Ontario மாகாண அரசின் COVID – 19 தொற்று நோய் தொடர்பான அறிக்கை

thesiyam

கடுமையான பனிப்புயல்: விமானங்கள் இரத்து. நெடுஞ்சாலைகள் மூடல்.

Lankathas Pathmanathan

Leave a Comment