September 15, 2026
தேசியம்
செய்திகள்

Conservative கட்சி Patrick Brownனுக்கு $100,000 அபராதம் விதித்தது!

Conservative கட்சி, முன்னாள் தலைமை வேட்பாளர் Patrick Brownனுக்கு அபராதம் விதித்துள்ளது.

இவருக்கு $100,000 அபராதம் விதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிதி முறைகேடுகள் தொடர்பான சிக்கல்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் $100,000 அல்லது தலைமைப் போட்டியில் நுழைவதற்கு ஒவ்வொரு வேட்பாளரும் கட்சிக்கு சமர்ப்பிக்க வேண்டிய இணக்க வைப்புத்தொகையின் மொத்தத் தொகையும் அபராதமாக விதிக்கப்படும் என கடந்த வாரம் அவருக்கு கூறப்பட்டதாக தெரியவருகிறது.

Patrick Brown கையெழுத்திட்ட உறுப்பினர்களுக்கான நன்கொடைகளை Conservative கட்சி திருப்பி வழங்கவேண்டும் என அவரது தகவல் தொடர்பு இயக்குனர் Gary Collins கோரினார்.

ஆனாலும் கட்சியினால் விதிக்கப்பட்டதாக கூறப்படும் அபராதம் குறித்து அவர் கருத்து Collins கூறவில்லை.

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து Patrick Brown தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த திங்கட்கிழமை Brampton நகர முதல்வராக Patrick Brown இரண்டாவது தடவையாக தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

ஏழு வருடங்களில் 3 பொது ஊழியர்களின் பாதுகாப்பு அனுமதியை இரத்து செய்த கனடா

Lankathas Pathmanathan

கனடாவை வந்தடைந்த 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்

Lankathas Pathmanathan

ஒரே நாளில் மீண்டும் 3,500க்கும் அதிகமான தொற்றுகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment