September 25, 2026
தேசியம்
செய்திகள்

பொருளாதாரத்தை கட்டியெழுப்புது முதல் பணி: Mark Carney

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் தனது அரசாங்கத்தின் உடனடி கவனம் செலுத்தப்படும் என பிரதமர் Mark Carney தெரிவித்தார்.

கனடிய நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு இந்த வாரம் ஆரம்பிக்கிறது.

இந்த நிலையில் புதிய சட்டமன்றத்திற்கான நிகழ்ச்சி நிரலை பிரதமர் Mark Carney வெளியிட்டார்.

தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ஞாயிற்றுக்கிழமை (25)  பிற்பகல் ஒரு உரை நிகழ்த்தினார்.

Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுவைத் திரட்டும் வகையில் நிகழ்த்தப்பட்ட இந்த உரை, புதிய நாடாளுமன்ற அமர்வுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிர்வாக நிகழ்ச்சி நிரலை வகுத்தது.

April 28 தேர்தல் வெற்றியின் பின்னர் நடைபெற்ற முதலாவது Liberal கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் Mark Carney உரையாற்றுவதை காண்பதற்கு ஊடகவியலாளர்கள் சிறிது நேரம் அனுமதிக்கப்பட்டனர்.

தனது அரசாங்கத்தின் உடனடி கவனம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது என இந்த உரையில் பிரதமர் குறிப்பிட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் வாக்குறுதியளித்த வரி குறைப்பு சட்டத்தை  விரைவாக நிறைவேற்றுவது அதில் பிரதானமானது என அவர் கூறினார்.

புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றம் திங்கட்கிழமை (26) கூடுகிறது.

அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (27) மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆற்றும் அரியணை உரை நடைபெறும்.

Related posts

Ripudaman Singh Malik கொலை வழக்கில் இருவர் மீது குற்றச்சாட்டு பதிவு!

Lankathas Pathmanathan

67 ஆயிரம் Honda, Acura வாகனங்கள் மீள அழைப்பு

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 11ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment