தேசியம்
செய்திகள்

கனடாவில் நேற்று மாத்திரம் 97  புதிய COVID மரணங்கள்

கனடாவில் நேற்று (24) மாத்திரம் 97  புதிய COVID மரணங்கள் பதிவாகின. இதன் மூலம் கடந்த 14 நாட்களில் கனடாவில் மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளன. கனடாவில் இதுவரை மொத்தம் 1,618 மரணங்கள் அறிவிக்கப்பட்டன.

கனடாவில் நேற்று 4,894 புதிய தொற்றுக்களும் பதிவாகின. இதன் மூலம் கடந்த 14 நாட்களில் கனடாவில் தொற்றுக்களின் எண்ணிக்கை 26 சதவீதம் அதிகரித்துள்ளன. கனடாவில் இதுவரை 342,444 மொத்த தொற்றுக்களும் அறிவிக்கப்பட்டன. நேற்று மீண்டும் Ontario, Alberta, Quebec ஆகிய மாகாணங்களில் தலா ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின.

Torontoவில் மூன்றில் ஒரு பொதுப் பாடசாலையில் தொற்றுக்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. இது Ontario மாகாணத்தின் சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமானதாகும். மொத்தம் 206 Toronto கல்விச்சபையின் பாடசாலையில் குறைந்தது ஒரு மாணவர் அல்லது பணியாளர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. Torontoவின் 40 சதவீத கத்தோலிக்க பாடசாலையிலும் தொற்றுக்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை Bramptonனிலும்  பாதிக்கும் அதிகமான பாடசாலைகளில் தொற்றுக்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. தவிரவும் London Ontatioவில் உள்ள வைத்தியசாலையில் 41 தொற்றுக்கள் அறிவிக்கப்படுகின்றன.

Related posts

விமான விபத்தில் பலியான கனடியர்களின் அடையாளம் வெளியானது

Lankathas Pathmanathan

Ontarioவில் COVID booster தடுப்பூசிகளின் விரிவாக்கம் குறித்த அறிவித்தல்

Toronto காவல்துறை முன்னாள் தலைவர் PC வேட்பாளரானார்

Lankathas Pathmanathan

Leave a Comment