தேசியம்
செய்திகள்

400 பில்லியன் டொலர்கள் வரை பற்றாக்குறை அதிகரிக்கலாம் – நிதியமைச்சர் Chrystia Freeland

கனடிய அரசின் இந்த (2020-2021) நிதி ஆண்டின் பற்றாக்குறை 381 பில்லியன் டொலர்களை விட அதிகமாக இருக்கும் என நிதியமைச்சர் Chrystia Freeland தெரிவித்தார்.

கனடாவின் நிதி மற்றும் COVID தொற்றின் செலவினங்களின் தாக்கம் குறித்த பொருளாதார அறிக்கையை துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland இன்று (திங்கள்) மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். கடந்த July மாதம் வெளியிடப்பட்ட பொருளாதார அறிக்கையின் திருத்தப்பட்ட பொருளாதார அறிக்கையாக இன்றைய அறிக்கை அமைந்திருந்தது

COVID தொற்றின் இரண்டாவது அலையின் மத்தியில் இந்த பற்றாக்குறை அதிகரிப்பு எதிர்வு கூறப்படுகின்றது. தொற்றுக்கு பிந்தைய பொருளாதாரத்தை முடுக்கிவிட 100 பில்லியன் டொலர்கள் திட்டத்தை இன்று அமைச்சர் Freeland அறிவித்தார். கனடியர்களையும் வணிகங்களையும் தொற்றின் மத்தியில் பாதுகாப்பதற்கான திட்டங்களுக்கு அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமை வழங்கும் எனவும் இன்று நிதியமைச்சர் கூறினார்.

பற்றாக்குறை அதிகரிக்கலாம்

தொற்றின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து, நீட்டிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை சந்தித்தால், 2020 மற்றும் 2021ஆம் நிதி ஆண்டின் பற்றாக்குறை 388.8 பில்லியன் டொலர்களை எட்டக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அல்லது கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அதிகரித்தால் பற்றாக்குறை 398.7 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் எனவும் நிதியமைச்சர் Freeland இன்று தெரிவித்தார். அதேவேளை தொற்றின் இரண்டாவது அலைக்கு பதிலளிக்கும் வகையில் கனடிய அரசாங்கம் மேலும் நிதி உதவிகளை இன்று வெளியிட்டுள்ளது.

உதவித் திட்டங்கள்

கனடிய அரசின் இன்றைய பொருளாதார அறிக்கையில் குழந்தைகள் நன்மை திட்டம் மற்றும் ஊதிய மானியத்தை அதிகரிக்கும் அறிவித்தல்கள் அடங்கியுள்ளன. COVID தொற்றின் இரண்டாவது அலையின் மத்தியில் கனடிய பொருளாதாரத்தை முடுக்கிவிட நிதியமைச்சர் Chrystia Freeland இன்று தனது நிதியறிக்கையில் அறிவித்தல்களை வெளியிட்டார்.

இதில் Child Benefit எனப்படும் கனடா குழந்தை நலத்திட்டத்துக்கான தற்காலிக அதிகரிப்பும் அடங்கியுள்ளது. தேசிய குழந்தை பராமரிப்பு முறைக்கு குறைந்த கட்டணமாக மத்திய அரசு மில்லியன் கணக்கான டொலர்களை புதிய செலவினங்களுக்கு முன்மொழிந்துள்ளது. இது குறித்த முழுமையான விபரங்கள் அடுத்த வசந்தகால வரவு செலவுத் திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்படும் என Liberal அரசாங்கம் இன்று தெரிவித்தது.

ஊதிய மானியத்தில் அதிகரிப்பு, தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கான இலக்கு உதவி திட்டம் ஆகியனவும் இன்று கனடிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டன. ஒரு தன்னிறைவு பெறும் வரை பொருளாதாரத்தை ஆதரிப்பது, தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் உதவி செய்வதற்கும் இலக்கு வைக்கப்பட்ட தொழில் மற்றும் பிராந்திய உதவிகளுக்கும் அதிக செலவு தேவைப்படும் என அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம்

COVID தொற்றுக்கான தடுப்பூசிகளுக்கான திட்டம் இல்லாமல், பொருளாதாரத்திற்கு எந்த திட்டமும் இருக்க முடியாது என இன்றைய Liberal அரசாங்கத்தின் பொருளாதார அறிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் Erin O’Toole கூறினார். கனடிய அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதை இன்றைய பொருளாதார அறிக்கை காட்டுவதாக Conservative கட்சித் தலைவர் தெரிவித்தார். கனடா குழந்தை நலனை அதிகரிப்பதன் மூலம் பெற்றோருக்கு ஆதரவாக ஒரு அறிவித்தல் இன்று வெளியிட்டப்பட்டதை வரவேற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர், அது தனது முன்மொழிவு எனவும் சுட்டிக்காட்டினார். Liberal அரசாங்கத்தின் பொருளாதார பதில் நடவடிக்கை ஒழுங்கற்றதும் குழப்பமடைந்ததும் எனவும் Erin O’Toole விமர்சித்துள்ளார்.

தொற்றின் போது இலாபம் ஈட்டுபவர்களுக்கு Liberal அரசின் இன்றைய திட்டம் மீண்டும் உதவுகின்றது என NDP கட்சியின் தலைவர் Jagmeet Singh விமர்சித்துள்ளார். உண்மையில் உதவி தேவைப்படுபவர்களை அரசாங்கத்தின் திட்டம் தவறவிடுகின்றது எனவும் அவர் கூறினார்.

Related posts

COVID தளர்வு நடவடிக்கைகளை பிற்போடும் Alberta!

Gaya Raja

Albertaவில் தொடரும் தொற்று எண்ணிக்கை

Gaya Raja

Air இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவர் British Colombiaவில் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

Leave a Comment