தேசியம்
செய்திகள்

தமிழ் தேசத்தின் சுதந்திர அரசை அங்கீகரிக்க கோரி கனடாவில் வாகன பேரணி

தமிழ் தேசத்தின் சுதந்திர அரசை அங்கீகரிக்க கோரி கடந்த சனிக்கிழமை (16) கனடாவில் தமிழர்களால் வாகன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

Brampton, Scarborough நகரங்களில் மதியம் ஆரம்பமான பேரணி Dundas சதுர்க்கம் வழியாக Toronto மத்திய பகுதியில் உள்ள அமெரிக்க துணை தூதரக அலுவலகத்தை மாலை சென்றடைந்தது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும், ஏழு தசாப்தங்களாக தமிழ் தேசத்தின் மேல் இடம்பெறும் ஆக்கிரமிப்பை அகற்றவும், ராஜபக்ச சகோதரர்கள் உட்பட அனைத்து இனப் படுகொலையாளர்களை ICCக்கு அனுப்பவும் கோரும் பதாகைகளை இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் பயன்படுத்தினர்.
தமிழ் தேசத்துக்கான சுதந்திர அரசு அங்கீகரிக்கப்படும் வரை இது போன்ற போராட்டங்கள் தொடரும் என இதில் கலந்து கொண்டவர்களினால் உறுதி எடுக்கப்பட்டது.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

கனடாவின் மிகப்பெரிய உரிமை கோரப்படாத அதிஷ்டலாப சீட்டு!

Lankathas Pathmanathan

தேசிய நினைவு தின நிகழ்வுகளில் போரில் இறந்தவர்களை கனடியர்கள் நினைவு கூர்ந்தனர்

Lankathas Pathmanathan

Leave a Comment