தேசியம்
செய்திகள்

சிறப்பு காவல்துறை அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர்

கைது செய்யப்பட்டபோது சிறப்பு காவல்துறை அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டை தமிழர் ஒருவர் எதிர்கொள்கின்றார்.

Peterboroughவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் Bramtpon நகரைச் சேர்ந்த சேரன் காசிலிங்கம் என்பவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவாகின. கடந்த சனிக்கிழமை இரவு எரிபொருள் நிலையமொன்றில் ஒரு வாடிக்கையாளர் குழப்பம் விளைவிப்பதான தொலைபேசி அழைப்பின் பேரில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அங்கு அமைதியை மீறுவதான குற்றச்சாட்டில் 39 வயதான சேரன் காசிலிங்கம் கைது செய்யப்பட்டார்

இந்த கைதின் போது இவர் சிறப்பு காவல்துறை அதிகாரியைத் தாக்கியதாக மேலும் இரண்டு குற்றச் சாட்டுக்கள் பதிவாகின. இவர் தன் மீதான குற்றச் சாட்டுக்களை அடுத்த மாதம் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவுள்ளார்.

Related posts

Alberta அடுத்த வாரம் COVID கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது

Lankathas Pathmanathan

பாதிக்கும் மேற்பட்ட கனேடியர்கள் கட்டாய தடுப்பூசிகளுக்கு ஆதரவு!

Gaya Raja

இஸ்ரேலில் மூன்றாவது கனேடியர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment