தேசியம்
செய்திகள்

பொதுப் போக்குவரத்தில் அதிகரித்து வரும் வன்முறை

கனடாவின் பொதுப் போக்குவரத்தில் அதிகரித்து வரும் வன்முறை நெருக்கடி குறித்து கவலை எழுப்பப்படுகிறது.

Edmonton, Toronto, Winnipeg போன்ற நகரங்களில் பொதுப் போக்குவரத்து பயணிகள் மீதான வன்முறை தாக்குதல்களின் சமீபத்திய அதிகரிப்பு, பொது போக்குவரத்து பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Torontoவில் கடந்த சில நாட்களில் மாத்திரம் ஐந்து வெவ்வேறு வன்முறை சம்பவங்கள் பொதுப் போக்குவரத்தில் நிகழ்ந்துள்ளன.

இந்த வன்முறைகளை தொடர்ந்து TTCஇல் தமது கண்காணிப்பை அதிகரிக்க Toronto காவல்துறை முடிவு செய்துள்ளது.

Toronto நகர முதல்வர் John Tory, TTC தலைமை நிர்வாக அதிகாரி Rick Leary ஆகியோருடன் இணைந்து Toronto காவல்துறை தலைவர் Myron Demkiw வியாழக்கிழமை (26) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

தினமும் 80க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் TTC தளங்களில் பணியில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் Edmonton பொது போக்குவரத்தில் 35 வன்முறை நிகழ்வுகள், ஒன்பது ஆயுதங்கள் தொடர்பான சம்பவங்கள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related posts

Scarborough துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – இருவர் காயம்!

Lankathas Pathmanathan

Liberal கட்சியின் 2026 தேசிய மாநாடு ஆரம்பம்

Lankathas Pathmanathan

பெரும் எண்ணிக்கையில் சட்டவிரோத போதைப் பொருள் பறிமுதல்!

Lankathas Pathmanathan

Leave a Comment