September 18, 2026
தேசியம்
செய்திகள்

ஏழு வயதான உக்ரைன் நாட்டின் அகதிக் கோரிக்கையாளர் Montreal விபத்தில் மரணம்

Montreal நகரில் செவ்வாய்க்கிழமை (13) வாகனம் மோதியதில் ஏழு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

பலியானவர் Maria Legenkovska என அடையாளம் காணப்பட்டார்.

இவர் உக்ரைன் நாட்டில் இருந்து அண்மையில் அகதியாக கனடாவை வந்தடைத்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியில் இவர் வாகனத்தால் மோதப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்த இடத்தில் நிறுத்தாமல் சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

45 வயதான இவர், புதன்கிழமை (14) நீதிமன்றில் தன் மீதான குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.

அவர் தொடர்ந்து விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு நாளை மீண்டும் நீதிமன்றில் நிறுத்தப்படுவார்.

Related posts

சர்ச்சைக்குரிய வேட்பாளரை பதவி நீக்கம் செய்ய Mark Carney மறுப்பு!

Lankathas Pathmanathan

New Brunswick மாகாண அமைச்சரவையில் மாற்றம்

Lankathas Pathmanathan

COVID மாறுபாடுகளினால் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள தயார்: தலைமை மருத்துவர்

Lankathas Pathmanathan

Leave a Comment