September 24, 2026
தேசியம்
செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் Quebec சட்டமன்ற உறுப்பினர் குற்றவாளி

முன்னாள் Quebec தேசிய சட்டமன்ற உறுப்பினர் Harold LeBel பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக கண்டறியப்பட்டார்.

முன்னாள் Parti Québécois சட்டமன்ற உறுப்பினரான இவர், பாலியல் வன்கொடுமைக்கு குற்றவாளி என நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.

ஒன்பது பெண்கள், மூன்று ஆண்கள் அடங்கிய நடுவர் குழு இரண்டு நாட்கள் ஆலோசனையின் பின்னர் LeBel குற்றவாளி என கண்டறிந்தனர்.

வெளியீட்டுத் தடையின் கீழ் உள்ள ஒரு பெண், 2017இல் LeBel தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார்.

LeBel 2014ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் Quebec சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.

Related posts

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

இரண்டாவது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கொண்டது Liberal அரசு!

Lankathas Pathmanathan

ஒரு நாளுக்கான அதிகூடிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட புதிய சாதனை Torontoவில் பதிவு

Gaya Raja

Leave a Comment