தேசியம்
செய்திகள்

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை சீரமைக்க போட்டி?

கனடிய பிரதமரின் வதிவிடமான 24 Sussex Drive இல்லத்தை புதுப்பிப்பதற்கான போட்டி ஆரம்பமானது.

தலைநகர் Ottawa-வில் உள்ள கனடிய பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இறுதியாக ஒரு பிரதமர் வசித்தது 11 ஆண்டுகளுக்கு முன்னதாகும்.

இந்த இல்லத்தை சீரமைத்து நவீன மயமாக்குவதற்காக, மத்திய அரசாங்கம் ஒரு தேசிய அளவிலான வடிவமைப்பு, கட்டுமானப் போட்டியை ஆரம்பிக்கிறது.

இந்த அறிவித்தலை பிரதமர் Mark Carney வெள்ளிக்கிழமை (26) வெளியிட்டார்.

இந்தப் போட்டியில் அனைத்து கனடிய நிறுவனங்களுக்கு பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இல்லத்தை, கனடாவின் வருங்காலப் பிரதமர்களுக்கு பாதுகாப்பான, எளிதில் அணுகக்கூடிய, நிலையானதொரு அதிகாரப்பூர்வ இல்லமாகவும் பணிபுரியும் இடமாகவும் மீண்டும் மாற்றுவதே நோக்கம் என தனது அறிவித்தலின் போது Mark Carney கூறினார்.

24 Sussex Drive வெறும் ஒரு வசிப்பிடம் அல்ல என குறிப்பிட்ட Mark Carney,  எமது அரசாங்க தலைவரின் பதவி பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக மரபுகளுக்குமான ஒரு அடையாளமாகும் என கூறினார்.

இந்த இல்லம் அதற்குரிய மரியாதையுடன் பராமரிக்கப்படவில்லை எனவும் பல  தசாப்தங்களாக பராமரிப்புப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வந்ததாகவும் Mark Carney கவலை தெரிவித்தார்

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 24 Sussex இல்லத்தைப் புதுப்பிப்பதற்கு முன்னாள் பிரதமர்கள் Stephen Harper, Jean Chretien, Joe Clark, Kim Campbell, Paul Martin, Justin Trudeau, Mila Mulroney (மறைந்த Brian Mulroney-யின் மனைவி) ஆதரவு தெரிவித்துள்ளதாக Mark Carney கூறினார்.

1867-இல் கட்டப்பட்ட 24 Sussex Drive , 10 பிரதமர்களின் இல்லமாக இருந்துள்ளது.

2015-இல் முன்னாள் பிரதமர் Stephen Harper-ருக்கு பின்னர், எந்த பிரதமரும் இந்த இல்லத்தில் வசிக்கவில்லை.

2015-ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர், முன்னாள் பிரதமர் Justin Trudeau-வும் அவரது குடும்பத்தினரும் Rideau Hall வளாகத்தில் உள்ள Rideau Cottage இல்லத்தில் வசிக்கத் தீர்மானித்தனர்.

Rideau Cottage இல்லத்தில் தற்போது Mark Carney வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய கிழக்கில் மோதலைத் தணிப்பது அவசியம்: Mark Carney!

Lankathas Pathmanathan

Quebec Liberal கட்சி தலைமை போட்டி ஆரம்பம்

Lankathas Pathmanathan

2024 Olympic போட்டிக்கான கனடிய அணியின் அதிகாரப்பூர்வ சீருடை வெளியானது

Lankathas Pathmanathan

Leave a Comment