September 12, 2026
தேசியம்
செய்திகள்

இடைக்கால நெறிமுறை ஆணையர் பதவி விலகல்

இடைக்கால நெறிமுறை ஆணையர் பதவியில் இருந்து Martine Richard உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவி விலகுகின்றார்.

புதன்கிழமை (19) ஒரு அறிக்கையில் இந்த அறிவித்தல் வெளியானது.

நாடாளுமன்ற குழு அவரது நியமனத்தை விசாரிக்க ஒப்புக் கொண்டது மறுதினம் இந்த அறிவித்தல் வெளியானது.

இவர் கடந்த மாதம் இடைக்கால நெறிமுறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

Martine Richard அமைச்சர் Dominic LeBlancகின் மைத்துனி ஆவார்.

இதனால் அவரது நியமனம் விமர்சனங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

மற்றும் ஓரு இடைக்கால ஆணையர் நியமிக்கப்படுவாரா என்பது அறிவிக்கப்படவில்லை.

Related posts

NATO பாதுகாப்பு செலவின இலக்கை அடைய கோரும் பிரேரணை கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

ஐந்து மாகாணங்களுடன் சுகாதார நிதி ஒப்பந்தங்களை கையெழுத்திட்ட மத்திய அரசாங்கம்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 22ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment