September 7, 2026
தேசியம்
செய்திகள்

பெண் வெறுப்பு குழுக்களைக் குறிவைக்கும் Conservative தலைவருக்கு கண்டனம்!

பெண் வெறுப்பு குழுக்களைக் குறிவைத்து YouTube குறிச்சொல்லை (tag) பயன்படுத்தியதற்காக Conservative கட்சி தலைவர் கண்டனங்களை எதிர்கொள்கிறார்.

தீவிர வலதுசாரி பெண் வெறுப்பு இணைய குழுக்களை ஈர்க்க Pierre Poilievre தனது YouTube பதிவுகளை பயன்படுத்துவதாக கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் Justin Trudeauவும் Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கண்டனத்தை முன்வைத்துள்ளனர்.

வியாழக்கிழமை (06) நாடாளுமன்ற அமர்வின் போது இந்த விடயம் குறித்து அவர்கள்  கருத்து தெரிவித்தனர்.

Conservative தலைவர் தனது சொந்த அரசியல் ஆதாயத்திற்காக இந்த நகர்வை எடுத்துள்ளதாக பிரதமர் Trudeau தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து Poilievre கேள்விகளை எதிர்கொண்டு பதிலளிக்க வேண்டும் என Trudeau வலியுறுத்தினார்

Conservative   தலைவர் இந்த விடயத்திற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோர வேண்டும் என பிரதமர் நாடாளுமன்றத்தில் அழைப்பு விடுத்தார்.

இந்த விடயம் தனது கவனத்திற்கு வந்தவுடன் அதனை சரிசெய்ததாக பிரதமரின் வலியுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில் Poilievre உறுதிப்படுத்தினார்.

அனைத்து வகையான பெண் வெறுப்பையும் கண்டிப்பதாகவும், தனது தவறுக்கு பொறுப்பேற்பதாகவும் Poilievre கூறினார்.

Related posts

Ontarioவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியது

Gaya Raja

நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சீன தூதர் கனடாவில் இருந்து வெளியேற்றம்

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு June 26?

Lankathas Pathmanathan

Leave a Comment