September 28, 2026
தேசியம்
செய்திகள்

Alberta மாகாண புதிய முதல்வர் தெரிவு

Alberta மாகாண UCP தலைமை பதவியை Danielle Smith வெற்றிபெற்றார்.

இதன் மூலம் அவர் Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Alberta விற்கு ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் இது என Smith கூறினார்.

ஆறாவதும் இறுதியுமான வாக்குச்சீட்டில் Smith வெற்றி பெற்றார்.

UCP தலைவரும் முதல்வருமான Jason Kenney அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரான Travis Toews தலைமை போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்றார்.

Smith 53.77 சதவீதமான வாக்குகளையும், Toews 46.23 சதவீதமான வாக்குகளையும் பெற்றனர்.

தலைமை பதிவிற்கு போட்டியிட்ட Brian Jean, Rebecca Schulz, Todd Loewen, Rajan Sawhney, Leela Aheer ஆகியோர் முந்தைய சுற்றுகளில் வெளியேற்றப்பட்டனர்.

Related posts

Donald Trump பதவியேற்பு: அமெரிக்காவில் கனடிய அரசியல் தலைவர்கள்

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபையில் மூன்று இடைத் தேர்தல்?

Lankathas Pathmanathan

கனடிய மத்திய வங்கி $522 மில்லியன் இழந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment