September 10, 2026
தேசியம்
செய்திகள்

மனநல நெருக்கடியை எதிர் கொள்பவர்களுக்கு அவசர உதவி இலக்கம் அறிமுகம்

மனநல நெருக்கடியை எதிர் கொள்பவர்கள் அவசர உதவிக்கு 988 என்ற இலக்கத்தை விரைவில் உபயோகிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

2023 இலையுதிர் காலத்தில் இந்த இலக்கம் பாவனைக்கு வரும் என கனடிய வானொலி-தொலைக்காட்சி தொலைத்தொடர்பு ஆணையம் புதன்கிழமை (31) அறிவித்தது.

உடனடி மனநல நெருக்கடி உதவி தேவைப்படும் கனடியர்கள் 988 என்ற இலக்கத்தை அழைத்து அல்லது குறுஞ்செய்தி அனுப்பி ஆலோசனை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிதில் நினைவில் கொள்ள கூடிய மூன்று இலக்க எண்ணை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மனநலம், தற்கொலை தடுப்பு உதவிகளுக்கான தடைகளை குறைக்க உதவும் என CRTC கூறியது.

Related posts

தேர்தலில் இருந்து விலகும் மேலும் இரு வேட்பாளர்கள்!

Gaya Raja

கடந்த ஆண்டு கனடாவில் வானிலை காரணமாக $3.1 பில்லியன் டொலர் காப்பீடு செய்யப்பட்ட சேதம்

Lankathas Pathmanathan

முதலாவது Moderna தடுப்பூசி ஏற்றுமதி கனடாவை வந்தடைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment