தேசியம்
செய்திகள்

12 மில்லியன் கனடியர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைக்கு நீங்களும் தகுதியுள்ளவரா?

கனடா மளிகை, அத்தியாவசியப் பொருட்கள் உதவித்தொகைக்கான கூடுதல் கொடுப்பனவுகள் வெள்ளிக்கிழமை (05) முதல் வழங்கப்படுகிறது.

மத்திய Liberal கட்சியின் முதன்மையான திட்டங்களில் ஒன்றான இந்த  உதவித் தொகை மொத்தம் 12 மில்லியன் கனடியர்களுக்கு வழங்கப்படும்.

இதற்கு தகுதியுள்ள கனடியர்களின் வங்கிக் கணக்குகளில் வெள்ளி முதல் இந்த உதவித்தொகை வைப்பிலிடப்படும்.

பிரதமர் March Carney இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இந்த உதவித் தொகையை அறிவித்தார்.

இந்தத் திட்டம் முன்னர் GST/HST credit என அழைக்கப்பட்டது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில், இந்த உதவித் தொகை  பொதுவாக காலாண்டு அடிப்படையில் வழங்கப்படுகிறது.

ஒரு முறை வழங்கப்படும் இந்த உதவித்தொகை குடும்பத்தின் அளவைப் பொறுத்து மாறுபடும்.

சராசரியாக குழந்தைகள் இல்லாத தனி நபருக்கு $267 வரையிலும், இரண்டு குழந்தைகளுடன் உள்ள தம்பதியருக்கு அதிகபட்சமாக $533 வரையிலும் வழங்கப்படும்.

ஒரு முறை வழங்கப்படும் இந்த கூடுதல் தொகையானது, ஆண்டு தொகையில் 50 சதவிகிதம் ஆகும்.

மேலும், July மாதம் முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, வழக்கமான காலாண்டு கொடுப்பனவுகளும் 25 சதவிகிதம் அதிகரிக்கும்.

2024-ஆம் ஆண்டு வரி அறிக்கையின் அடிப்படையில் வருமான வரம்பை பூர்த்தி செய்யும் கனடியர்கள், இந்த உதவித்தொகையை நேரடி வைப்பு அல்லது அஞ்சல் மூலம் பெறுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.

Related posts

கனடாவில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து விற்பனை செய்ய புதிய அதிகாரங்களை வழங்கும் சட்டமூலம்

Lankathas Pathmanathan

Ontarioவை மீளத் திறக்கும் திட்டம் அறிவிப்பு

Lankathas Pathmanathan

Justin Trudeau: அடுத்த பொது தேர்தலை எதிர்கொள்ள தயார்!

Lankathas Pathmanathan

Leave a Comment