தேசியம்
செய்திகள்

Cricket கனடா தலைவரின் இல்லம் மீண்டும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானது!

பணம் பறித்தல் தொடர்பான துப்பாக்கிச் சூட்டிற்கு Cricket கனடா தலைவரின் இல்லம் இரண்டாவது முறையாக இலக்காகியுள்ளது.

British Colombia மாகாணத்தின் தெற்கு Newton பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை (04) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக Surrey காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூடு, பணம் பறித்தல் தொடர்பானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Cricket கனடா தலைவர் Arvinder Khosa-வுக்கு சொந்தமான அந்த இல்லம், முன்னதாக May 20 அன்று துப்பாக்கித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

அதிகாலை பொழுதில் துப்பாக்கிச் சூடு நடந்த போது வீட்டில் ஆட்கள் இருந்த போதிலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்தது.

இந்த விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும்  முந்தைய அச்சுறுத்தல்கள், May 20, 2026 அன்று நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக, இது பணம் பறித்தல் தொடர்பானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது எனவும் காவல்துறையின் செய்திக்குறிப்பு தெரிவித்தது.

SPS மிரட்டல் தடுப்பு நடவடிக்கை குழு இந்த விசாரணையை ஏற்றுக்கொண்டுள்ளது.

சர்வதேச துடுப்பாட்ட சபையில் இருந்து கனடாவின் உறுப்புரிமை அண்மையில் இடை நீக்கம் செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

பதவி இழப்பாரா Alberta முதல்வர்?

தொடர் கொலையாளி Robert Pickton நிலை குறித்து அடுத்த சில நாட்களில் மதிப்பிடப்படும்

Lankathas Pathmanathan

Quebec வெள்ளத்தில் காணாமல் போன தீயணைப்பு படையினர் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

Leave a Comment