தேசியம்
செய்திகள்

புதிய Liberal தலைவர் Mark Carney – பிரதமர் Justin Trudeau சந்திப்பு

புதிய Liberal தலைவர் Mark Carney திங்கட்கிழமை (10) பிரதமர் Justin Trudeau-வை சந்தித்தார்.
கனடாவின் புதிய பிரதமராக Mark Carney ஞாயிற்றுக்கிழமை (9) தெரிவு செய்யப்பட்டார்.
Mark Carney தற்பொழுது உத்தியோகபூர்வமாக கனடாவின் Liberal கட்சியின் தலைவராக இருந்தாலும், அவர் இன்னும் பிரதமராக பதவி ஏற்கவில்லை.
இருப்பினும் இந்த தலைமை மாற்றத்திற்கான செயல்முறை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் Justin Trudeau-வை திங்களன்று சந்தித்த Mark Carney தலைமை மாற்றத்திற்கான திட்டம் குறித்து உரையாடினார்.
பிரதமர் பதவியை Justin Trudeau முறைப்படி பதவி விலக வேண்டும்.
அவ்வாறு செய்ய, Justin Trudeau ஆளுநர் நாயகம் Mary Simon-னை சந்திப்பார்.
Justin Trudeau-வின் ஆலோசனையின் பேரில், Mary Simon புதிய Liberal தலைவர் Mark Carney-யை ஒரு அரசாங்கத்தை அமைக்க அழைப்பார்.
86 சதவீதமான வாக்குகளை பெற்று Liberal கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் புதிய பிரதமராகவும் Mark Carney தெரிவு செய்யப்பட்டார்.
151,899 Liberal உறுப்பினர்கள் புதிய பிரதமரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் வாக்களித்தனர் என Liberal கட்சி அறிவித்தது.
இந்தத் தேர்தலில் Mark Carney 131,674 வாக்குகளை பெற்றார்.
Chrystia Freeland இரண்டாவது இடத்தில் 11,134 வாக்குகளை பெற்றார்.
பெரும் வெற்றி பெற்ற மறுநாளான திங்களன்று, Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுவை Mark Carney சந்தித்தார்.

Related posts

முதியவர்களை குறி வைத்த மோசடியில் 14 பேர் கைது

Lankathas Pathmanathan

இலங்கை தார்மீக, பொருளாதார ரீதியாக திவாலான ஒரு நாடு: நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

Liberal தலைமைக்கு போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan

Leave a Comment