தேசியம்
செய்திகள்

அமெரிக்காவிற்கான மின்சார ஏற்றுமதிக்கு Ontario 25 சதவீதம் வரி அறிவித்தது!

அமெரிக்காவிற்கான மின்சார ஏற்றுமதிக்கு Ontario மாகாண அரசாங்கம் 25 சதவீதம் கூடுதல் வரி கட்டணத்தை அறிவித்துள்ளது.

Ontario முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை திங்கட்கிழமை வெளியிட்டார்.

மூன்று அமெரிக்க மாநிலங்களில் சுமார் 1.5 மில்லியன் இல்லங்களுக்கு மின்சார கட்டண உயர்வை இந்த அறிவிப்பு குறிக்கிறது.

Steel, அலுமினிய வரிகளை அமெரிக்கா கனடா மீது புதன்கிழமை விதிக்கும் என்ற எதிர்பார்ப்பின் பின்னணியில் இந்த அறிவித்தல் வெளியானது.

அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டல்களுக்கு எதிராக கனடிய தலைவர்கள் தொடர்ந்து நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் எண்ணெய், எரிவாயு ஏற்றுமதிக்கு பதிலடி கொடுக்க தனது எதிர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு Alberta முதல்வர் Danielle Smith-க்கு Doug Ford அழைப்பு விடுத்தார்.

இந்த யோசனையை Danielle Smith நிராகரித்தார்.

இந்த விடயத்தில் மாகாணத் தலைவர்கள் வெவ்வேறு அணுகுமுறைகளை எடுத்து வருவதாக எரிசக்தி, இயற்கை வளத்துறை அமைச்சர் Jonathan Wilkinson கூறினார்.

Related posts

கனடா இந்த வாரம் 6 இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை பெறும்

Lankathas Pathmanathan

Toronto காவல்துறை அதிகாரி காயம்

Lankathas Pathmanathan

நாசகார செயல்: தமிழ் One ஒளிபரப்பு வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது குறித்து SV Media கண்டனம்!

Lankathas Pathmanathan

Leave a Comment