கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை மீண்டும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இந்த வட்டி விகித குறைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய வங்கியின் வட்டி விகித அறிவிப்பு புதன்கிழமை வெளியாகிறது.
அமெரிக்காவுடன் மாறிவரும் வர்த்தகப் போருக்கு மத்தியில் இந்த வட்டி விகித அறிவிப்பு வெளியாகிறது.
மத்திய வங்கி மற்றொரு கால் புள்ளி வட்டி விகிதக் குறைப்பை அறிவிக்கும் என பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதே நேரத்தில் கனடாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான அமெரிக்காவுடனான சர்ச்சை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும் மத்திய வங்கி அவதானிக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் எதிர்வு கூறுகின்றனர்.
அமெரிக்காவினால் விதிக்கப்படும் கடுமையான கட்டணங்கள் நடைமுறையில் இருந்தால் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் கனடா மந்தநிலைக்குள் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதத்தை மூன்று சதவீதமாக குறைக்க தொடர்ச்சியாக ஆறு வரி குறிப்புகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.