தேசியம்
செய்திகள்

Air இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவர் British Colombiaவில் சுட்டுக் கொலை

1985 ஆம் ஆண்டு Air இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர் British Colombiaவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Ripudaman Singh Malik, வியாழக்கிழமை (14) காலை British Colombia மாகாணத்தின் Surrey நகரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

இவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார் என RCMP தெரிவித்தது.

வியாழக்கிழமை நிகழ்ந்தது ஒரு குறிவைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் என புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகத்திற்கிடமான வாகனம் முழுமையாக தீப்பிடித்து எரிந்த நிலையில் காணப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்களையும், தப்பிச் செல்லும் வாகனமாக பயன்படுத்தப்பட்ட இரண்டாவது வாகனத்தையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

329 பேரைக் கொன்ற 1985 ஆம் ஆண்டு Air இந்தியா விமான குண்டுவெடிப்பு சதி குற்றச்சாட்டுகளிலிருந்து Malik, Ajaib Singh Bagri ஆகியோர் 2005ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ottawa Pride அணிவகுப்பில் இருந்து விலகும் Liberal கட்சி

Lankathas Pathmanathan

Nova Scotia வெள்ளத்தில் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

Lankathas Pathmanathan

போலந்தில் ரஷ்யாவின் ஊடுருவல் பொறுப்பற்றது: Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment