தேசியம்
செய்திகள்

ஐ.நா. உலக உணவுத் திட்டத்துக்கு 250 மில்லியன் டொலர்களை வழங்கும் கனடா

உலகளாவிய ரீதியில் எதிர்கொள்ளப்படும் பட்டினியின் அச்சுறுத்தலுக்கான காரணம் ரஷ்யா என பிரதமர் Justin Trudeau குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள கனடா, ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துக்கு கூடுதலாக 250 மில்லியன் டொலர்களை வழங்குகின்றது.

10 நாள் சர்வதேச நாடுகளுக்கான பயணமொன்றை ருவாண்டாவில் ஆரம்பித்துள்ள பிரதமர், இந்த உதவியை வியாழக்கிழமை (23) அறிவித்தார்.

வெள்ளிக்கிழமை முதல் பிரதமர் 53 பொதுநலவாய நாடுகளின் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

இதில் பஞ்சத்தின் வேதனையை எதிர் கொள்ளும் நாடுகளின் தலைவர்களையும் Trudeau சந்திக்கவுள்ளார்.

2018 ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக பொதுநலவாய நாடுகளின் தலைவர்களை Trudeau சந்திக்கின்றார்.

Related posts

Ottawaவில் போராட்டங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள்ள கைது!

Lankathas Pathmanathan

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேர் மீண்டும் கனடாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்

Lankathas Pathmanathan

Alberta மாகாண புதிய முதல்வர் பதவியேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment