தேசியம்
செய்திகள்

இடமாற்றப்படும் Ottawa கனடா தின கொண்டாட்டங்கள்

மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக எதிர்வரும் July மாதம் கனடா தின கொண்டாட்டங்கள் தலைநகர் Ottawaவில் நேரில் நடைபெறுகிறது.

ஆனால் கனடா தின கொண்டாட்டங்கள் இம்முறை நாடாளுமன்றத்தில் நடைபெறாது என கனடிய பாரம்பரிய திணைக்களம் தெரிவித்தது.

கனடா தினத்தின் முக்கிய நிகழ்வு இந்த ஆண்டு Ottawa நகரின் மேற்கே LeBreton Flats பூங்காவில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற Centre Block  பகுதியில் நிகழும் கட்டுமான பணிகள் காரணமாக கனடா தினத்தின் முக்கிய நிகழ்வு புதிய இடத்திற்கு மாற்றப்படுகின்றது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக கனடா தின முக்கிய நிகழ்வுகள் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் பெண்ணின் மரணத்தில் கணவர் முதல் நிலைக் கொலையாளியென தீர்ப்பு

Lankathas Pathmanathan

Philippines நிலநடுக்கத்தில் கனடியர்களுக்கு பாதிப்பு இல்லை: அனிதா ஆனந்த்

Lankathas Pathmanathan

நாட்டின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment