தேசியம்
செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை

கனடாவின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (09) வரை இந்த நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (08) குறிப்பிடத்தக்க பனிப்பொழிவும், பலத்த மழை பொழிவும் பதிவாகியது.

Manitoba, Ontario, சில Atlantic பகுதிகள் கடுமையான பனிப்பொழிவு அல்லது உறைபனி மழையால் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்வு கூறப்படுகிறது.

Manitobaவின் சில பகுதிகளில் குளிர்கால புயல் எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது.

அங்கு 10 முதல் 20 cm வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றின் வேகம் மணிக்கு 60 km வரை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Ontarioவில், மேற்கு பிராந்தியங்களில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை வரை குறிப்பிடத்தக்க பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.

சில பகுதிகளில் குறைந்தது 20 cm பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாணங்களில், தீவிர காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் வேட்பாளர்கள் தடுப்பூசி பெற்றுள்ளார்களா? – கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு!

Gaya Raja

வணிக வாகன திருட்டு விசாரணையில் 15 பேர் கைது

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment