தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontarioவில் வாகனக் காப்பீட்டு கட்டணங்களை குறைக்க NDP திட்டம்

Ontarioவில் வாகனக் காப்பீட்டு கட்டணங்களை 40 சதவீதம் குறைக்கும் திட்டத்தை  புதிய ஜனநாயக கட்சி புதன்கிழமை (11) அறிவித்தது.
இதன் மூலம் வருடாந்தம் ஓட்டுநர்கள் சராசரியாக 660 டொலர்களை சேமிக்க முடியும் என NDP தலைவர் Andrea Horwath தெரிவித்தார்.

Quebec, Manitoba, British Colombia, Saskatchewan மாகாணங்களை போல Ontarioவும் பொது வாகன காப்பீட்டை ஆய்வு செய்யவுள்ளது என அவர் கூறினார்.

தான் முதல்வராக தேர்தெடுக்கப்பட்டால் வாகன காப்பீட்டு கட்டண உயர்வினை 18 மாதங்களுக்கு தடை செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

2020 ஆம் ஆண்டில், Ontario  வாகனக் காப்பீட்டாளர்கள் 3.63 பில்லியன் டொலர்கள் இலாபம் ஈட்டியுள்ளனர் எனவும் Horwath தெரிவித்தார்.

 

Related posts

Ontario Science Centre மூடப்படுகிறது!

Lankathas Pathmanathan

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிறுத்தத்தை வரவேற்கும் கனடா

Gaya Raja

NDP மாகாண சபை உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment