September 17, 2026
தேசியம்
செய்திகள்

பசுமைக் கட்சியின் இடைக்காலத் தலைவர் தெரிவு!

கனடாவின் பசுமைக் கட்சியின் இடைக்காலத் தலைவராக Amita Kuttner தெரிவாகியுள்ளார்.
பல மாதங்களாக  உட்கட்சி பூசல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கட்சி அவற்றை நிறுத்தி சுற்றுச்சூழல் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என Kuttner கூறினார்.

ஒரு திருநங்கையாக தன்னை அடையாளப்படுத்தும் 30 வயதான Kuttner, பசுமைக் கட்சி அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் கட்சியின் உள்ளக சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விருப்புவதாக தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் பசுமைக் கட்சிக்கான மக்கள் ஆதரவு சரிந்தது.
தேர்தலின் பின்னர் Annamie Paul தலைவர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

2023 Davis கோப்பை தரவரிசையில் Group A பிரிவில் முதலாவது நாடாக கனடா

Lankathas Pathmanathan

அமெரிக்கா மீதான பதில் வரிப் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்ட பொருட்கள்?

Lankathas Pathmanathan

கனடியர்களின் தேவைகளை அறிய பிரதமர் தவறி விட்டார்: Conservative இடைக்கால தலைவர்

Lankathas Pathmanathan

Leave a Comment