தேசியம்
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் வார விடுமுறை முழுவதும் கடுமையான மழை?

Toronto பெரும்பாக பகுதிக்கான சிறப்பு வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் கனடா வார இறுதிக்கான சிறப்பு வானிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

தெற்கு Ontario-வின் பெரும்பாலான பகுதிகள் இந்த வார இறுதியில் சிறப்பு வானிலை அறிவிப்பின் கீழ் உள்ளன.

இதில் சனிக்கிழமை (22) காலை முதல் ஞாயிற்றுக்கிழமை (23) காலை வரை “கணிசமான மழை” பெய்யக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

சனி காலையில் இடியுடன் கூடிய மழை உருவாகி, பிற்பகலில் பெரும் மழையாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதாக எச்சரிக்கப்படுகிறது.

Toronto-வில் மாத்திரம் மொத்தம் 50 mm வரை மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்படுகிறது.

ஞாயிறன்றும் மேலதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

குழந்தை மரணத்தில் பெற்றோர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

தகவல் அறியும் உரிமைச் சட்டங்களில் Doug Ford அறிமுகப்படுத்தியுள்ள மாற்றங்கள்

Lankathas Pathmanathan

முற்றுகை போராட்டம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: Freeland சாட்சியம்

Lankathas Pathmanathan

Leave a Comment