தேசியம்
செய்திகள்

வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு நீடிக்கப்படும்

வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை நீடிக்கும் முடிவை Ontario அரசாங்கம் எடுத்துள்ளதாக தெரியவருகின்றது

மாகாணத்தின் பொது சுகாதார அதிகாரிகளால் இதற்கான வலியுறுத்தல் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவித்தலை அடுத்த வார ஆரம்பத்தில் முதல்வர் Doug Ford விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வார விடுமுறையில் தனது அமைச்சரவையுடன் இந்த விடயம் குறித்து முதல்வர் Ford விவாதிக்கவுள்ளார். இந்த உத்தரவு மாகாணம் முழுவதும் February 16ஆம் திகதி வரையும் – Toronto, Peel, York பிராந்தியங்களில் February 22ஆம் திகதி வரையும் நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

இங்கிலாந்தின் தொற்றின் திரிபின் பரவல் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த முடிவை Ontario அரசாங்கம் எடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது. Ontarioவின் அவசரகால நிலை மற்றும் வீட்டில் தங்குவதற்கான உத்தரவு தற்போது இந்த மாதம் 9 ஆம் திகதியுடன் காலாவதியாகிறது.

Related posts

ஆயிரக்கணக்கான போலி இரண்டு டொலர் குற்றிகள் கைப்பற்றப்பட்டன

Lankathas Pathmanathan

கனடிய இறக்குமதிகள் மீது அமெரிக்க வரி February 1 நடைமுறைக்கு வரும்: வெள்ளை மாளிகை

Lankathas Pathmanathan

வதிவிட பாடசாலைகளில் நிகழ்ந்தவை இனப்படுகொலை: நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

Lankathas Pathmanathan

Leave a Comment