September 11, 2026
தேசியம்
செய்திகள்

புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வரும் கனடா

COVID தொற்று காரணமாக புகலிடக் கோரிக்கையாளர்களை எல்லைக் கடவையில் திருப்பி அனுப்பும் கொள்கையை கனடா முடிவுக்குக் கொண்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட கொள்கை ஆவணத்தின் படி இந்த தகவல் வெளியானது.

March 2020 முதல் October  நடுப்பகுதிக்கு இடையில் குறைந்தபட்சம் 544 அகதிகளை அமெரிக்காவுக்கு கனடா திருப்பி அனுப்பியுள்ளது.

இந்த கொள்கை இப்போது ஏன் முடித்துக் கொள்ளப்படுகிறது என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

அதேவேளை தடுப்பூசி போடப்படாத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகள் குறித்த கேள்விகளுக்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

Related posts

உக்ரைனுக்கு மேலும் ஆதரவு வழங்க கனடா தயாராக உள்ளது

Lankathas Pathmanathan

Ontarioவில் COVID ஆதிக்கம் காரணமாக Omicronஇன் புதிய துணை மாறுபாடு எதிர்பார்க்கப்படுகிறது

Billy Bishop விமான நிலைய விரிவாக்கத்திற்காக பெறப்பட்ட நிலங்களைத் திருப்பித்தர நகர முதல்வர் கோரிக்கை?

Lankathas Pathmanathan

Leave a Comment