September 24, 2026
தேசியம்
செய்திகள்

தொற்றின் ஆரம்ப நாட்களில் Quebec மாகாணத்தில் பதில் நடவடிக்கை தடைபட்டது!

அறியாமை, பற்றாக்குறை ஆகியவற்றால் Quebec மாகாணத்தின் COVID பதில் நடவடிக்கை தடைபட்டுள்ளது என மூத்த சுகாதார ஆலோசகர் தெரிவித்தார்.

Quebecகின் பொது சுகாதார இயக்குநரின் மூலோபாய மருத்துவ ஆலோசகரான வைத்தியர் Richard Massé இன்று ஒரு மரண விசாரணை அதிகாரியிடம் இந்த கருத்தை கூறினார்.

நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் தொற்றுக்கான Quebecகின் ஆரம்பகால பதில் நடவடிக்கை, தொழிலாளர் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் தொற்று எவ்வாறு பரவுகிறது என்பது பற்றிய அறியாமை ஆகியவற்றால் தடைபட்டதாக அவர் கூறினார்

தொற்றின் ஆரம்ப நாட்களில், மாகாணத்திற்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் பாதுகாப்பதில் சிரமம் இருந்தது எனவும் இந்த விசாரணையில் Massé கூறினார்.

Related posts

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் இதுவரை ஐம்பது வேட்பாளர்கள்

Lankathas Pathmanathan

சர்ச்சைக்குரிய ஜேர்மன் அரசியல்வாதியிடம் பேசவில்லை: Pierre Poilievre

Lankathas Pathmanathan

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக Air இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment