தேசியம்
செய்திகள்

Nova Scotia மாகாணத்தில் புதிய முதல்வர் தெரிவு

Nova Scotia மாகாண Liberal கட்சியின் அடுத்த தலைவராகவும் மாகாணத்தின் முதல்வராகவும் Iain Rankin தெரிவாகியுள்ளார்.

37 வயதான முன்னாள் அமைச்சர் Rankin, மூவர் கொண்ட Liberal கட்சியின் அடுத்த தலைவருக்கான போட்டியில் இன்று (சனி) வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது சுற்றில் 52 சதவீதத்திற்கு அதிகமான வாக்குக்களைப் பெற்ற நிலையில் கட்சியின் தலைமையை Rankin வெற்றி பெற்றார்.

இதன் மூலம் Nova Scotiaவின் 29ஆவது முதல்வராகவும் Rankin தெரிவாகியுள்ளார். இந்தத் தெரிவு Nova Scotia மாகாணத்தில் தலைமுறை மாற்றத்துக்கான ஒரு தெரிவு என தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பின்னர் திடீரென ஓய்வு பெறுவதாக கடந்த கோடையில் முதல்வர் Stephen McNeil அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Influenza காரணமாக கடந்த மாதம் British Colombiaவில் ஐந்து குழந்தைகள் மரணம்

Lankathas Pathmanathan

கனடாவில் COVID தடுப்பூசியை தயாரிக்க ஒப்பந்தம்

Lankathas Pathmanathan

கனடாவை வந்தடைவதற்கு ஆபத்தான பயணங்களை முன்னெடுக்க வேண்டாம்: ஹரி ஆனந்தசங்கரி வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment