தேசியம்
செய்திகள்

AstraZeneca தடுப்பூசிகள் குறித்து பிரதமரின் தவறான தகவல்

20 மில்லியன் COIVD தடுப்பூசிகளை கனடா பெறும் என பிரதமர் Justin Trudeau தவறாகக் கூறியுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கின்றது.

20 மில்லியன் AstraZeneca தடுப்பூசியை கனடா பெறும் என இன்று (வெள்ளி) கனடிய பிரதமர் தெரிவித்திருந்தார். AstraZeneca 20 மில்லியன் தடுப்பூசிகளை June மாத இறுதிக்குள் அனுப்புவதற்கான முழு உத்தரவையும் நிறைவேற்றும் என பிரதமர் தெரிவித்திருந்தார். கனடா எதிர்கொள்ளும் தடுப்பூசி பற்றாக்குறைக்கான புதில் நடவடிகையாக இந்த அறிவித்தலை பிரதமர் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார். இந்த விடயத்தில் AstraZeneca தயாரிப்பாளரின் தலைமை நிர்வாக அதிகாரியிடமிருந்து தான் உத்தரவாதத்தை பெற்றுள்ளதாகவும் பிரதமர் கூறியிருந்தார்.

ஆனாலும் பிரதமர் இந்த விடயத்தில் தவறாக தகவல்களை பகிர்ந்துள்ளதாக அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். Health கனடாவின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்னர் வளங்கள் காலக்கெடு அறிவிக்கப்படாது என பொது சேவை மற்றும் கொள்முதல் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

சீனாவில் அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு பிரதமர் Trudeau ஆதரவு

Lankathas Pathmanathan

CEBA கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு 2023 வரை நீட்டிப்பு

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment