தேசியம்
செய்திகள்

கனடா அடுத்த வாரம் 45 இலட்சம் தடுப்பூசிகளை பெறும்: அமைச்சர் அனிதா ஆனந்த்

கனடா அடுத்த வாரம் 34 இலட்சம் Pfizer தடுப்பூசிகளை பெறவுள்ளது.

கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த அறிவித்தலை வெளியிட்டார். May  மாதம்  24ஆம் திகதிக்கான தடுப்பூசியின் விநியோகத்தை Pfizer நிறுவனம் May  மாதம்  17ஆம் திகதி அனுப்பி வைக்க  ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் அடுத்த வாரம் அதிகரித்த Pfizer தடுப்பூசிகளை கனடா பெறவுள்ளது.

அடுத்த வாரம் 11 இலட்சம் Moderna  தடுப்பூசிகளும் கனடாவை வந்தடையவுள்ளன. இதன் மூலம் கனடாவுக்கு மொத்த 45 இலட்சம் Moderna தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளது.

June மாதம் முடிவடையும் தடுப்பூசி விநியோகத்தின் இரண்டாவது காலாண்டில், கனடா மொத்தம் 242 இலட்சம் Pfizer, 103 முதல் 123  இலட்சம் Moderna, 44 இலட்சம் வரை AstraZeneca தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும் என கூறப்படுகின்றது.

Related posts

NATO தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

Scarborough மருத்துவமனை அறக்கட்டளைக்கு 250,000 சேகரித்த கனடிய தமிழர்கள்

Gaya Raja

கனடிய டொலரின் பெறுமதி நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது

Leave a Comment